புற்றுநோய் (CANCER)
புற்றுநோய் (cancer) என்பது கேடுதரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பல நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும். இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும் இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன நோய் என்று பெயரிடப்படுகின்றது. கேடு விளைவிக்கா கட்டிகள் உடலின் வேறு பாகங்களுக்குப் பரவுவதில்லை. உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான உயிரணுக்கள், கழலை அல்லது கட்டி எனப்படும் இழையங்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. தீங்கில்லா கட்டிகளைப் பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, அவை மீண்டும் தோன்றுவது இல்லை. குருதிப் புற்றுநோய் தவிர்ந்த ஏனைய புற்று நோய்களில் பொதுவாகக் கட்டிகள் தோன்றும்
புற்று
நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள்:
·
மார்பு அல்லது மற்ற
பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
·
புதிய மச்சம் அல்லது
ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
·
குணப்படாத புண்கள்.
·
கொடுமையான ஓயாத இருமல்
அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
·
மலம் மற்றும் மூத்திரம்
கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
·
தொடர்ந்து அஜீரணத்தன்மை
அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
·
விவரிக்கமுடியாத
விதத்தில உடல் எடையில் மாற்றம்.
·
இயல்புக்கு மாறாக
இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
·
பாதிப்படைந்த இடத்தில்
தொடர்ந்த வலி
புற்று நோய் வகைகள்:
இரத்தப்புற்று நோய்:
லுகிமியா
அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய்.
இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில்
பெருகும் நிலை காணப்படும்.
அறிகுறிகள்
·
அதிகளவில் இரத்தம்
வடிதல்
·
இரத்தசோகை
·
காய்ச்சல், குளிர்,
இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
·
பலவீனம் மற்றும் சோர்வு
·
பசியின்மை மற்றும்
/அல்லது எடை குறைதல்
·
பல் ஈறுகள் வீக்கமடைதல்
அல்லது இரத்தம் வடிதல்
·
நரம்பியல் சம்பந்தமான
அடையாளங்கள் (தலைவலி)
·
ஈரல் மற்றும் கணையம்
வீக்கமடைதல்
·
காயங்கள் சுலபமாக
ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
·
மூட்டு வலி
·
உள்நார்தசைகள்
வீக்கமடைதல்
மார்பகப்புற்று நோய்:
மார்பகப்புற்று
நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை
கண் முன் நிறுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.
அறிகுறிகள்
·
மார்பு வீங்குதல்
·
மார்புக்
காம்பிலிருந்து வடிதல்
·
மார்பகக் காம்பு உள்
நோக்கி இழுத்தல்
·
சிவந்த / வீக்கமடைந்த
மார்புக் காம்பு
·
மார்பகம் பெரியதாகுதல்
·
மார்பு சுருங்குதல்
·
மார்பகம் கல்போல்
கடினமாதல்
·
எலும்பு வலி
·
முதுகு வலி
புரோஸ்டேட் புற்றுநோய்
அறிகுறிகளில் சிறுநீர் கழிப்பதில்
சிரமம் உள்ளது, ஆனால் சில நேரங்களில் எந்த அறிகுறிகளும் இல்லை.
அடிப்படை உயிரணு புற்றுநோய்:
இந்த புற்றுநோய் பொதுவாக ஒரு வெள்ளை, மெழுகு கட்டி அல்லது
முகம் மற்றும் கழுத்து போன்ற சூரிய ஒளியில் வெளிப்படும் பகுதிகளில் பழுப்பு நிறமான
செதில்களாக தோன்றும்.
தோல் புற்றுநோய் (மெலனோமா):
அறிகுறிகளில் புதிய, அசாதாரண வளர்ச்சி அல்லது ஏற்கனவே
இருக்கும் மோலில் மாற்றம் இருக்கலாம். மெலனோமாக்கள் உடலில் எங்கும் ஏற்படலாம்.
பெருங்குடல்
புற்றுநோய்:
பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள் புற்றுநோயின் அளவு
மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தது. பொதுவாக அனுபவம் வாய்ந்த சில அறிகுறிகளில்
குடல் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், மல நிலைத்தன்மையின் மாற்றங்கள்,
மலத்தில் இரத்தம் ஏற்படலாம்
நுரையீரல் புற்றுநோய்:
இருமல் (பெரும்பாலும் இரத்தத்துடன்), மார்பு வலி, மூச்சுத்திணறல்
மற்றும் எடை இழப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். புற்றுநோய் முன்னேறும் வரை இந்த
அறிகுறிகள் பெரும்பாலும் தோன்றாது.
லிம்போமா:
அறிகுறிகள் விரிவாக்கப்பட்ட நிணநீர், சோர்வு மற்றும் எடை
இழப்பு ஆகியவை அடங்கும்.
•புகையிலை பயன்படுத்தக்கூடாது.
•கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
•முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.
•சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
•40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து,உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புற்று நோய்க்கு
சிகிச்சை:
அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.




No comments:
Post a Comment